டேராடூன்: ஜார்கண்ட் மாநிலம் குந்தியில் நேற்றிரவு(ஆகஸ்ட் 21) பிட்னா முண்டா (65), அவரது மகன் சுதா முண்டா ( 25), உறவினர் விகாஸ் மஹ்தோ (27) ஆகிய மூவரும் மண்வெட்டியால் சரமாரியாக தாக்கப்பட்டு உயிரிழந்தாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் குந்தி போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து உடல்களை மீட்டு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் தரப்பில், "இந்த கொலைகளை குந்தி பகுதியை சேர்ந்த ஹேமந்த் பூர்டி என்பவர் செய்துள்ளார். இவர் உயிரிழந்த பிட்னா முண்டாவின் நெருங்கிய உறவினராவார். இந்த சம்பவத்தின்போது அவர் மது அருத்தியிருந்தார். அதுமட்டுமல்லாமல் மூவரையும் மண்வெட்டியால் கொலை செய்துவிட்டு அங்கியே அமர்ந்திருந்துள்ளார்.