உத்தர கன்னடா:கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டம், டோட்மனே கிராமத்தைச் சேர்ந்தவர் மஞ்சுநாத ஹஸ்லர் (24). மதுப் பழக்கத்திற்கு அடிமையான இவர் நேற்று (அக். 13) இரவு தனது தாய், தங்கையிடம் சாம்பார் நன்றாகச் செய்யவில்லை எனக் கூறி சண்டையிட்டுள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த இளைஞர், தான் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்து தாய், தங்கையை நோக்கிச் சுட்டுள்ளார். இதில் தாய் பார்வதி நாராயணா ஹஸ்லர் (42), தங்கை ரம்யா நாராயணா ஹஸ்லர் (19) உயிரிழந்தனர்.