கிரிதிஹ்: ஜார்கண்ட் மாநிலம் கிரிதிஹ் மாவட்டத்தில் உள்ள தாராபூர் கிராமத்தில், 12ஆவது மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த கணவர் அவரை கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. தாராபூர் கிராமத்தை சேர்ந்த ராம்சந்திரா துரி என்வருக்கு 12 திருமணங்கள் நடந்துள்ளன. இவரது மோசமான குணத்தால் 11 மனைவிகள் அவரை விட்டு பிரிந்துள்ளனர்.
இவர் வரதட்சணைக்காக மட்டுமே அடுத்தடுத்து திருமணம் செய்துகொள்வதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், கடந்தாண்டு சாவித்ரி தேவி (40) என்னும் பெண்ணை ராம்சந்திரா துரி 12ஆவதாக திருமணம் செய்து கொண்டார். இவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இவருக்கும் மதுப்பழக்கம் இருந்து வந்ததால், மதுபோதையில் அவர்கள் வாக்குவாதம் செய்துவந்ததாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
அந்த வகையில், நேற்றிரவு (ஏப்ரல் 2) இருவரும் ஒன்றாக மது அருந்தி உள்ளனர். நள்ளிரவில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ராம்சந்திரா வீட்டில் இருந்த கட்டையால் சாவித்ரியில் தலையில் பலமாக தாக்கி உள்ளார். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த சாவித்ரி மயக்கமடைந்து கீழே விழுந்தார்.