பிகார் மாநிலம் லாபா கிராமத்தைச் சேர்ந்த முகமது தாஹிர் இன்று (மார்ச் 25) காலை தனது மனைவி, இரு குழந்தைகளை உயிருடன் எரித்துக் கொன்றுள்ளார். இது குறித்து அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் அடிப்படையில், காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
முதற்கட்ட விசாரணையில் தாஹிருக்கும் அவரது மனைவிக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது, இதனால் ஆத்திரமடைந்த தாஹிர் தனது மனைவியையும், குழந்தைகளையும் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொன்றுள்ளதாகவும் தெரியவந்தது.