விஜயவாடா:ஆந்திர மாநிலம், விஜயவாடாவைச் சேர்ந்தவர், சரண். இவரது மனைவி காவல் நிலையத்தில் அளித்தப் புகாரில் கூறியிருப்பதாவது, சரணுக்கும், தனக்கும் திருமணமாகி பெண் குழந்தை உள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி மனக்கசப்பு ஏற்பட்டு வாக்குவாதம் உருவானது.
வரதட்சணை கேட்டும், ஆண் குழந்தை பெற்றுத் தராததை குத்திக் காட்டியும் சரண் அடிக்கடி அடித்து துன்புறுத்தியதாகவும், இதற்கிடையே தான் மீண்டும் கருவுற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த 21 வயது பெண்ணுக்கும், சரணுக்கும் தொடர்பு ஏற்பட்டதாகவும், தன்னை விவாகரத்து செய்து விட்டு அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள சரண் திட்டமிட்டதாகவும் பெண் தெரிவித்துள்ளார். விவாகரத்து செய்ய சரியான காரணம் தேவைப்பட்ட நிலையில், உடல் நிலை பரிசோதனை செய்ய மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி தனக்கு ரத்தம் செலுத்தியதாகப் பெண் கூறியுள்ளார்.