தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இளம்பெண்ணை மிரட்டி பாலியல் வல்லுறவு:  இளைஞர் கைது! - உபியில் இளம்பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த இளைஞர் கைது

லக்னோ: உத்திரப் பிரதேச மாநிலத்தில் இளம் பெண்ணை வீடியோ எடுத்து, மிரட்டி பலமுறை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிய இளைஞரை காவல் துறையினர் கைது செய்தனர்.

இளம்பெண்ணை மிரட்டி பாலியல் வல்லுறவு செய்த இளைஞர் கைது
இளம்பெண்ணை மிரட்டி பாலியல் வல்லுறவு செய்த இளைஞர் கைது

By

Published : Feb 19, 2021, 10:37 PM IST

உத்திரப் பிரதேச மாநிலம் சம்பல் பகுதியைச் சேர்ந்தவர் முன்னா (22). இவர், அதேப் பகுதியைச் சேர்ந்த 21 வயது இளம்பெண்ணை ஆபாசமாக வீடியோ எடுத்து, அதனை குடுபத்தாரிடம் பரப்பி விடுவதாக மிரட்டி பலமுறை பாலியல் வல்லுறவு செய்துள்ளார்.

இந்நிலையில், அப்பெண்ணிற்கு பிப்.8ஆம் தேதி திருமணம் முடிந்துள்ளது. திருமணத்திற்குப் பின்னரும் முன்னா, அப்பெண்ணை தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார்.

தன்னிடமிருந்த வீடியோக்களை அப்பெண்ணின் கணவருக்கும் அனுப்பியுள்ளார். இதனால், அப்பெண்ணின் கணவர் அவரை விட்டு விலகியுள்ளார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலயத்தில் புகார் அளித்த நிலையில், இளம்பெண்ணை மிரட்டி வந்த முன்னாவை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு சாகும்வரை சிறை தண்டனை

ABOUT THE AUTHOR

...view details