ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் தனது காதலியைப்போதை மருந்து கொடுத்து, பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜெய்ப்பூரைச்சேர்ந்த சமீர் என்னும் இளைஞரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இதுகுறித்து காவல் துறையினர் தெரிவிக்கையில், இருவரும் ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி சமீர் இளம்பெண்ணை ஹோட்டலுக்கு அழைத்துள்ளார்.
பின்னர், பெண்ணிற்கு போதைப்பொருள் கொடுத்து அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதன்பின் அந்த பெண் மயங்கியதால் பயந்துபோன சமீர், சிறுமியின் சகோதரியை ஹோட்டலுக்கு வரவழைத்து, பாதிக்கப்பட்ட பெண்ணை சகோதரியுடன் மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார் எனத்தெரிவித்துள்ளனர்.