கோட்டயம்:கேரள மாநிலம் தலையோலப்பறம்பு கிராமத்தைச் சேர்ந்த விக்ரமன் என்ற முதியவர் தென்னை மரத்தின் மேல் உள்ள காய்ந்த சருகுகளை அகற்று மேலே சென்றார். தென்னை மரத்தின் உச்சியில் சுத்தம் செய்து கொண்டிருந்த போது விக்ரமன் தவறி விழ நேர்ந்தது. இருப்பினும் ஓலைகளுக்கு இடையே வசமாக சிக்கி கொண்டார். கால் மட்டும் கீழே தொங்கிய படி சிக்கினார்.
கேரளாவில் தென்னை மர உச்சியில் சிக்கிய முதியவர்- பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறை - பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறை
கேரளாவில் தென்னை மரத்தில் ஏறிய முதியவர் ஒருவர் எதிர்பாராதவிதமாக மரத்தின் உச்சியில் மாட்டிக்கொண்டார். அவரை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.
கேரளாவில் தென்னை மரத்தின் கிழைகளில் சிக்கிய முதியவர்- பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறை
இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து சென்ற தீயணைப்புத் துறை வீரர்கள் கயிறு மற்றும் ஏணியின் உதவி கொண்டு அரை மணி நேரம் கழித்து அந்த முதியவரை பத்திரமாக மீட்டனர். பின்னர் அவர் மருத்துவ பரிசோதனைக்குப் பின் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதையும் படிங்க:இருசக்கர வாகனம் - மினி லாரி மோதல் - சிசிடிவி காட்சி
Last Updated : Jul 27, 2022, 1:33 PM IST