தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ரூ.1 கோடி கம்பெனி பணத்துடன் மாயமான ஊழியர் - பெங்களூருவில் கம்பெனி பணம் கொள்ளை

பெங்களூருவில் கம்பெனி பணம் ரூ.1 கோடி உடன் மயாமான ஊழியரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ரூ.1 கோடி கம்பெனி பணத்துடன் மாயமான ஊழியர்
ரூ.1 கோடி கம்பெனி பணத்துடன் மாயமான ஊழியர்

By

Published : Feb 7, 2023, 6:28 PM IST

பெங்களூரு:கர்நாடக மாநிலம் பெங்களூருவின் மடிவால் பகுதியில் தனியாருக்கு சொந்தமான நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் மூலம் ஏடிஎம்களில் பாதுகாப்பாக பணம் நிரப்பும் சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்த பணத்தை நிரப்பும் பணியில் ராஜேஷ் மெஸ்தா என்பவர் 11 ஆண்டுகளாக ஈடுபட்டுவந்துள்ளார்.

இந்த நிலையில், பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அவர் பணிக்கு வருவதை நிறுத்தியுள்ளார். நிறுவனம் அவரை தொடர்பு கொள்ள முயற்சித்தும் முடியவில்லை. இதனிடையே டிசம்பர் 28ஆம் தேதி முதல் பிப்ரவரி 1ஆம் தேதி வரை ஏடிஎம்களில் செலுத்தப்பட்ட பணத்தில் ரூ.1.03 கோடி மாயமாகியுள்ளது.

இதனால் சந்தேகமடைந்த நிறுவனத்தினர், ராஜேஷ் மெஸ்தா மீது மடிவால் போலீசாரிடம் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மெஸ்தாவை தீவிரமாக தேடிவருகின்றனர். முதல்கட்ட தகவலில், ராஜேஷ் மேஸ்தா உத்தர கன்னடா மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும் 15 ஆண்டுகளுக்கும் மேல் சின்னம்மா லேஅவுட் பகுதியில் வசித்துவந்ததும், இதனிடையே நிதி நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்ததும் தெரியவந்துள்ளது.

இவருடன் தொடர்பில் இருந்தவர்கள், நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்டோரிடம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். அதேபோல காணமல்போன ரூ. 1 கோடி பணம் இவரிடம் ஒப்படைக்கப்பட்ட பணமா அல்லது வேறு ஊழியரிடம் கொடுக்கப்பட்ட பணமா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

இதையும் படிங்க:சிறுத்தையிடம் மல்லுகட்டி மான் குட்டியை மீட்ட 65 வயது மூதாட்டி

ABOUT THE AUTHOR

...view details