ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம், அதிலாபாத் மாவட்டம், கான்பூரைச் சேர்ந்தவர், அர்ஜூன்(27). ஆசிரியர் பயிற்சியை முடித்த அவர் பள்ளிகள் திறக்கப்படாததால் வேலையில்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார்.
தனது சொந்த மாமன் மகள்கள் இருவரிடமும் அடிக்கடி போன் பேசி பொழுதைக் கழித்த அர்ஜூன் ஒரே நேரத்தில் ஒருவருக்குத் தெரியாமல் ஒருவரைக் காதலித்துள்ளார். அவர்களில் ஒருவர் கான்பூர் கிராமத்தைச் சேர்ந்த உஷாராணி (23), மற்றொருவர் ஷம்புகுதேம் (Shambhugudem) கிராமத்தைச் சேர்ந்த சூர்யகலா (21) ஆவார்.
இருவரையும் மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்த அர்ஜூனின் திருமணத்திற்கு முதலில் அவர்களது பெற்றோர் சம்மதிக்கவில்லை. ஆனால், உஷாராணியும் சூர்யகலாவும் திருமணமென்றால், "அது மாமன் அர்ஜூனோடுதான்" என்று ஒற்றைக் காலில் நின்றுள்ளனர். வேறு வழியில்லாமல் பெற்றோர்களும் இவர்களது திருமணத்திற்கு ஒப்புக்கொண்டனர்.