தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

200 ரூபாய்க்கு ஏற்பட்ட தகராறு...ஒருவர் உயிரிழப்பு - ஆந்திர மாநில செய்திகள்

ஹைத்ராபாத் : ஆந்திரா மாநிலம் கடப்ப மாவட்டத்தில், ஜீப் ஸ்டாண்டில் 200 ரூபாய்க்கு ஏற்பட்ட தகராறில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

man-died-in-clash-for-rs-200-in-pulivendula
man-died-in-clash-for-rs-200-in-pulivendula

By

Published : Mar 7, 2021, 6:19 PM IST

ஆந்திராவின் கடப்ப மாவட்டத்தில் உள்ள புலிவேந்துலாபகுதியில் ஜீப் ஸ்டாண்டு உள்ளது. இங்கு, 200 ரூபாய்க்காக பாபுல் ரெட்டி என்பவருக்கும், சின்னா(48) என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், பாபுல் ரெட்டி சின்னாவை தாக்கியதில் அவர் உயிரிழந்தார். சின்னாவுக்கு முன்னதாக இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். சின்னா இதய பிரச்சினையால் இறந்தாரா? அல்லது சண்டையில் காயமடைந்தாரா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:ராயபுரத்தில் தேர்தல் பரப்புரையை தொடங்கினார் அமைச்சர் ஜெயக்குமார்

ABOUT THE AUTHOR

...view details