ஜெய்ப்பூர்:ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் பெற்றோர் மற்றும் 2 மகன்களை கொன்றுவிட்டு ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஜோத்பூர் போலீசார் தரப்பில், பீல்வா கிராமத்தை சேர்ந்த ஷங்கர் லால் (38) என்பவர் தனது தந்தை சோனாராம் (65), தாயார் சம்பா (55), மகன்கள் லட்சுமண் (14), தினேஷ் (8) ஆகிய 4 பேரையும் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் நேற்று (நவம்பர் 3) நடந்துள்ளது.
முதலில் தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த தந்தை சோனாராமை கோடாரியால் வெட்டிக்கொலை செய்துள்ளார். அதன்பின் தாயார் சம்பாவை அடித்துக்கொலை செய்துள்ளார். அதன்பின் இருவது உடல்களுடன் மகன்கள் லட்சுமண் மற்றும் தினேஷை கிணற்றில் தூக்கி வீசினார். அதன்பின் அருகில் உள்ள மற்றொரு கிணற்றில் தானும் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.