தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கள்ளக்காதலால் பயங்கரம்: மகளை தலை துண்டித்து ஆணவக் கொலை செய்த தந்தை கைது - மகளை கொலை செய்த தந்தை

ஆந்திராவில் திருமணத்துக்கு பிறகும் வேறொரு நபருடன் காதலை தொடர்ந்த பெண்ணை, தந்தையே ஆணவக் கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆணவக் கொலை கைது
ஆணவக் கொலை கைது

By

Published : Feb 25, 2023, 5:49 PM IST

பன்யாம்: ஆந்திர மாநிலம் நந்தியால் அருகே உள்ள அலமுரு பகுதியை சேர்ந்தவர் தேவேந்திர ரெட்டி. இவருக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் பிரசன்னாவுக்கு (21), கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. தம்பதியர் ஹைதராபாத்தில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் தாய் வீட்டுக்கு வந்த பிரசன்னா கணவருடன் செல்ல மறுத்தார். இந்த நிலையில் தான் அவர் ஆணவக் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில், பிரசன்னாவுக்கு திருமணத்துக்கு முன்பே வேறொரு நபருடன் தொடர்பு இருந்துள்ளது. திருமணம் முடிந்த பிறகும், அந்த நபருடன் பழகி வந்துள்ளார். இதையறிந்த தேவேந்திர ரெட்டி, கடந்த 10ம் தேதி பிரசன்னாவை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

பின்னர் சடலத்தை அருகே உள்ள வனப்பகுதிக்கு காரில் எடுத்து சென்றுள்ளார். அங்கு தலையை துண்டித்து வீசியுள்ளார். உடலை வேறொரு இடத்தில் வீசிவிட்டு, ஒன்றும் தெரியாதது போல் வீடு திரும்பியுள்ளார். எனினும், சந்தேகம் அடைந்த பிரசன்னாவின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.

அப்போது மகளை கொலை செய்ததை தேவேந்திர ரெட்டி ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், கொலை செய்யப்பட்ட பிரசன்னாவின் சடலத்தை மீட்டனர். இச்சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணத்துக்கு பிறகு வேறொரு நபருடன் தொடர்பில் இருந்த மகளை, தந்தையே கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: மினி டிரக் - பயணிகள் வாகனம் நேருக்கு நேர் மோதல் - 7 பேர் பலி!

ABOUT THE AUTHOR

...view details