தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வரதட்சணை கொடுமை - மனைவியை மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்த கணவர் - latest national news

கர்நாடகாவில் வரதட்சணை கேட்டு கணவர் தனது மனைவி மற்றும் அவரது பெற்றோரை மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மனைவியை மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்த கணவர்
மனைவியை மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்த கணவர்

By

Published : Aug 3, 2021, 8:44 AM IST

கர்நாடகா மாநிலம் விஜய்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அனிதா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் சந்தோஷின் தந்தைக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனையொட்டி சந்தோஷ், மனைவி அனிதாவை வரதட்சணை கேட்டு அம்மா வீட்டிற்கு செல்லும்படி கூறியுள்ளார்.

இதற்கு அவர் தொடர்ந்து மறுப்பு தெரிவிக்க, கோபமடைந்த கணவர் தனது பெற்றோருடன் சேர்ந்து அனிதாவை மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்துள்ளனர். மேலும் அனிதாவின் பெற்றோரையும் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர், அனிதா மற்றும் அவரது பெற்றோரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க:வரதட்சணை கொடுமை - இளம் பெண் தற்கொலை

ABOUT THE AUTHOR

...view details