ராஜஸ்தான் மாநிலம், பார்மர் மாவட்டத்தில், இளைஞர் ஒருவர் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட காணொலி, சமூக வலைதளங்களில் கடந்த சில நாள்களாக வைரலானது.
சிறுநீர் குடிக்குமாறு வற்புறுத்தி இளைஞரைத் தாக்கிய கும்பல்! - ராஜஸ்தான் மாநில செய்திகள்
ராஜஸ்தான்: பார்மர் மாவட்டத்தில் கும்பல் ஒன்று இளைஞர் ஒருவரை இரும்புக் கம்பியால் தாக்கி சிறுநீர் குடிக்க வற்புறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![சிறுநீர் குடிக்குமாறு வற்புறுத்தி இளைஞரைத் தாக்கிய கும்பல்! ராஜஸ்தான் கிரைம் செய்திகள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11133739-962-11133739-1616558533148.jpg)
இதனையடுத்து வீடியோவில் தாக்கப்படும் நபரையும், அவரது தந்தையையும் காவல் துறையினர் அடையாளம் கண்டுபிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், இந்த சம்பவம் பதினைந்து நாள்களுக்கு முன்பு நடந்ததாகவும், தனது மகன் பயத்தில் யாரிடமும் அதைச் சொல்லவில்லை எனவும் அவரது தந்தை தெரிவித்தார்.
மேலும் தனது மகனை 15 நாள்களுக்கு முன்பு வீட்டிலிருந்து நான்கு பேர் கடத்திச் சென்று இரும்புக் கம்பியால் தாக்கியது மட்டுமின்றி, அவரை சிறுநீர் குடிக்க சொல்லி கட்டாயப்படுத்தியாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.