தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நிலப்பிரச்னையில் நடவடிக்கை எடுக்காததால் முதலமைச்சர் அலுவலகம் முன்பு தீக்குளித்த இளைஞர்! - தீக்குளிக்க முயற்சி

லக்னோ: 36 வயதான இளைஞர் ஒருவர் முதலமைச்சர் ஆதித்யநாத் அலுவலகத்திற்கு வெளியே தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Yogi's office
முதலமைச்சர் அலுவலகம்

By

Published : Feb 1, 2021, 9:05 PM IST

உத்தரப் பிரதேச மாநிலம், கன்னோஜ் மாவட்டத்தைச் சேர்ந்த உமேஷ் என்பவர் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அலுவலகத்திற்கு முன்பாக தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டார். உடனடியாக அங்கு பணியிலிருந்த காவல்துறையினர் அந்நபரை மீட்டு, அருகிலிருந்த அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 30 விழுக்காடு தீக்காயங்களுடன் உமேஷ் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். உமேஷுக்கு சொந்தமான நிலத்தில் சில பிரச்னைகள் இருந்ததாகவும், பல முறை மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் விரக்தியில் உமேஷ் இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:கரோனா தாக்கம்... மானியம் வழங்கியதற்கான செலவு 160 விழுக்காடு உயர்வு!

ABOUT THE AUTHOR

...view details