தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உ.பி.யில் இளம்பெண்ணை மதம் மாற்றம் செய்திட வற்புறுத்தியவர் கைது! - Man arrested under anti-conversion law in UP's Bijnor

லக்னோ: பிஜ்நோரில் இளம்பெண்ணை கடத்தி மத மாற்றம் செய்திட வற்புறுத்திய நபரை, காவல் துறையினர் கைதுசெய்தனர்.

உபி
உபி

By

Published : Dec 17, 2020, 1:17 PM IST

உத்தரப் பிரதேசம் மாநிலம் பிஜ்நோரில் இளம்பெண் கடத்தப்பட்டு, மத மாற்றம் செய்திட வற்புறுத்திய வழக்கில், சாகிப் என்பவரைக் காவல் துறையினர் கைதுசெய்தனர்.

மத மாற்றம் தடுப்புச் சட்டம்

இது குறித்து பேசிய பிஜ்னோர் (கிராமப்புற) காவல் கண்காணிப்பாளர் சஞ்சய் குமார், "கடந்த சில நாள்களாக தம்பூரைச் சேர்ந்த ஒரு இளம்பெண் காணவில்லை. இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்திவந்தோம். தற்போது, அப்பெண் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். குற்றவாளி சாகிப்பை கைதுசெய்துள்ளோம்.

விசாரணையில், அவர் தனது உண்மையான அடையாளத்தை மறைத்து சோனு என்ற பெயரில் அறிமுகமாகியுள்ளார். மேலும், அப்பெண்ணை கடத்தி மதம் மாற வேண்டும் என வற்புறுத்தியுள்ளது தெரியவந்துள்ளது. தற்போது, அவர் மத மாற்றம் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளார்" என்றார்.

இந்தத் தண்டனைச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்படுபவர்களுக்கு, ஒன்றுமுதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. உ.பி.யில் சமீபத்தில்தான், இந்தச் சட்டம் அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details