மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மருமகன் என நடித்து பாஜக எம்எல்ஏ உபாத்யாவிடம் இருந்து பணம் பறிக்க நட்வர்லால் என்ற நபர் திட்டமிட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவர் தன்னுடைய பெயரை விராஜ் சஹா என அறிமுகம் செய்துகொண்டு, பாஜக எம்எல்ஏ உபாத்தியாவிடம் இருந்து 40 ஆயிரம் பணத்தை உதவியாக கேட்டுள்ளார். மத்திய அமைச்சரின் மருமகன் என்று அவரும் பணம் கொடுக்க முன்வந்துள்ளார். ஆனால் அதன் பின்னர் விராஜ் நடவடிக்கைகளில் சந்தேகம் வரவே அவர் காவல் துறையில் புகாரளித்துள்ளார்.