தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிரதமர் அலுவலகத்தில் பணிபுரிவதாகக் கூறி மோசடி - குஜராத்தில் சிக்கியது எப்படி? - Gujarat

குஜராத்தில் தான் பிரதமர் அலுவலகத்தில் பணிபுரிவதாகக் கூறி மோசடியில் ஈடுபட முயன்ற நபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

பிரதமர் அலுவலகத்தில் பணிபுரிவதாகக் கூறி மோசடி - குஜராத்தில் சிக்கியது எப்படி?
பிரதமர் அலுவலகத்தில் பணிபுரிவதாகக் கூறி மோசடி - குஜராத்தில் சிக்கியது எப்படி?

By

Published : Jun 25, 2023, 10:34 AM IST

வதோதாரா (குஜராத்):குஜராத்தில் வதோதாரா மாவட்டத்தில் மயங்க் திவாரி என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2022ஆம் ஆண்டு, மார்ச் மாதம் முதல் தன்னை டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் ஆலோசகத் துறையில் பணிபுரியும் இயக்குநர் என பலருக்கும் அறிமுகம் ஆகி உள்ளார். இதன் தொடர்ச்சியாக பள்ளிகள் மற்றும் அதன் தாளாளர்கள் அல்லது அறங்காவலர்கள் உடன் நட்பாகப் பழகி வந்து உள்ளார்.

அப்போது, தனது நெருங்கிய நண்பரின் இரண்டு மகன்களுக்கு பள்ளியில் சேர்க்கை வேண்டும் எனக் குறிப்பிட்டு, ஒரு பள்ளி நிர்வாகத்தை திவாரி அணுகி உள்ளார். அது மட்டுமல்லாமல், தனது நண்பரான மிஸ்ரா பாய்க் என்பவர் இந்திய ராணுவத்தில் பணிபுரிவதாகவும், அவர் தற்போது புனேவில் இருந்து வதோதாராவுக்கு வந்ததாகவும் கூறி உள்ளார்.

இந்த நிலையில், வதோதாராவில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழக அறங்காவலரைச் சந்திக்குமாறு திவாரிக்கு பள்ளியின் இயக்குநர் அறிவுறுத்தி உள்ளார். ஏனென்றால், திவாரியின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் தான் ஒரு பிரதமர் அலுவலக அதிகாரி என அவர் குறிப்பிட்டு இருந்து உள்ளார்.

இதனையடுத்து, சம்பந்தப்பட்ட அறங்காவலரிடம் பள்ளியை கல்வி ஆராய்ச்சி இடமாக மாற்றுவது மட்டுமல்லாமல் பல திட்டங்களை செயல்படுத்த உதவுவதாக திவாரி கூறி உள்ளார். மேலும், இதற்காக பணம் செலவாகும் எனவும் திவாரி அறங்காவலரிடம் தெரிவித்து உள்ளார்.

இவ்வாறு அறங்காவலர் மற்றும் பள்ளி இயக்குநரை திவாரி முழுமையாக நம்ப வைத்து உள்ளார். இருப்பினும், சில மாதங்கள் கழித்து திவாரியின் நடவடிக்கைகளில் அறங்காவலருக்கு சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. இதனால், தனக்கு தெரிந்த அரசு அதிகாரிகள் உள்பட பலரிடம் திவாரி குறித்து விசாரித்து உள்ளார்.

இந்த விசாரணையில், திவாரி பிரதமர் அலுவலக அதிகாரி இல்லை என்பதும், அவர் பல்வேறு பொய்களைக் கூறி ஏமாற்ற முற்படுவதும் தெரிய வந்துள்ளது. எனவே, முதலில் பள்ளி நிர்வாகத்திற்கு அறங்காவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதன் பிறகு, இது தொடர்பாக நேற்றைய முன்தினம் (ஜூன் 23) பள்ளி நிர்வாகம் சார்பில் வகோதியா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

இந்தப் புகாரின் பேரில் மயங்க் திவாரி மீது இந்திய தண்டனைச் சட்டம் 406 நம்பிக்கைக்கு மீறிய குற்றம் செய்தல், 420 ஏமாற்றுதல் மற்றும் 170 தன்னை ஒரு மக்கள் சேவகராகச் சித்தரிப்பது உள்ளிட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து உள்ளனர். இதன் தொடர்ச்சியாக, நேற்று மயங்க் திவாரியை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக, அகமதாபாத்தைச் சேர்ந்த கிரண் படேல் என்பவர், காஷ்மீர் பள்ளத்தாக்கில் தான் ஒரு பாதுகாப்பு அதிகாரி எனக் கூறி உயர்தர விருந்தோம்பல் மற்றும் பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:உடன்படிக்கைக்கு ஒத்துழைத்த வாக்னர் குழு - நடவடிக்கைகளை தளர்த்திய ரஷ்யா!

ABOUT THE AUTHOR

...view details