கொல்கத்தா: தேர்தல் பரப்புரையின்போது பல தலைவர்கள் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவிப்பதுண்டு. அந்த வகையில் இஸ்லாமியர்களின் வாக்குகள் குறித்து கருத்து தெரிவித்ததாக பாஜக அளித்த புகாரின் அடிப்படையில், மம்தா பானர்ஜி விளக்கமளிக்கத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
இது குறித்து மம்தா பானர்ஜி அளித்த விளக்கம் ஏற்கும்படியாக இல்லை என அதிருப்தி தெரிவித்த தேர்தல் ஆணையம், மம்தா பானர்ஜி தேர்தல் பரப்புரையில் ஈடுபட 24 மணி நேரம் (ஏப். 12 இரவு 8 மணிமுதல் ஏப். 13 இரவு 8 மணி வரை) தடைவிதித்து உத்தரவிட்டது.