தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டெல்லி செல்கிறார் மம்தா பானர்ஜி- பிரதமருடன் சந்திப்பு! - திரிணாமுல் காங்கிரஸ்

மூன்றாவது முறையாக பதவியேற்ற பின், முதல்முறையாக டெல்லி செல்கிறார் மம்தா பானர்ஜி.

Mamata
MamataMamata

By

Published : Jul 27, 2021, 9:26 AM IST

டெல்லி : டெல்லி செல்லும் மம்தா பானர்ஜி இன்று (ஜூலை 27) மாலை 4 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசுகிறார்.

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இன்று டெல்லி செல்கிறார். திரிணாமுல் காங்கிரஸ் வழங்கியுள்ள ஐந்து நாள் பயணத்தின் அட்டவணையின்படி, செவ்வாய்க்கிழமை (ஜூலை 27) மாலை 4 மணிக்கு பானர்ஜி மோடியை சந்திக்கிறார்.

தொடர்ந்து, மம்தா பானர்ஜி புதன்கிழமை ஜனாதிபதி ராம் நாத் கோவிந்தை சந்திக்க வாய்ப்புள்ளது என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

பின்னர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் கமல்நாத், ஆனந்த் சர்மா மற்றும் அபிஷேக் மனு சிங்வி உள்ளிட்ட பல கட்சித் தலைவர்களையும் அவர் சந்திக்க உள்ளார். நாடாளுமன்றத்தின் மழைக்கால அமர்வுக்கு மத்தியில் மம்தா எதிர்க்கட்சி தலைவர்களையும் சந்திக்க வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க : பெகாசஸ் வாடிக்கையாளர் யார்- ப.சி. கிடுக்கிப்பிடி!

ABOUT THE AUTHOR

...view details