தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

முதலமைச்சர்கள் கூட்டத்தை புறக்கணித்த மம்தா! - கரோனா நிலை

கொல்கத்தா: பிரதமர் மோடியுடன் நடைபெற்ற முதலமைச்சர்கள் கூட்டத்தை மம்தா பானர்ஜி புறக்கணித்துள்ளார்.

மம்தா
மம்தா

By

Published : Apr 23, 2021, 2:56 PM IST

நாடு முழுவதும் கரோனா பரவல் தீவிரமாகிவரும் நிலையில், மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை மேற்கொண்டார். அக்கூட்டத்தை, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி புறக்கணித்துள்ளார். அதற்கு பதிலாக, மேற்குவங்க தலைமை செயலாளர் அலபன் பாண்டியோபாத்யாய் அக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.

மேற்குவங்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றுவரும் நிலையில், இதுபோன்ற கூட்டங்களை மம்தா ஏற்கனவே புறக்கணித்திருந்தார். கரோனா நிலை குறித்து கண்காணிக்க அலபன் பாண்டியோபாத்யாய் தலைமையில் ஆறு பேர் கொண்ட குழுவை மம்தா அமைத்திருந்தார்.

இதுவரை, மேற்குவங்கத்தில் 7,00,904 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 10,766 பேர் உயிரிழந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details