மேற்குவங்கத்தில், வரும் மே மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மக்களை கவரும் வகையில் அங்கு 'மா' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அத்திட்டத்தை அம்மாநில முதலமைச்சர் மம்தா வீடியோ கான்பரன்சிங் மூலம் இன்று தொடங்கி வைத்தார்.
5 ரூபாய்க்கு உணவு; ஏழை மக்களின் துயரை துடைக்கும் 'மா' திட்டம்! - 'மா' திட்டம்
கொல்கத்தா: ஏழை மக்களின் துயரைத் துடைக்கும் வகையில் மேற்குவங்கத்தில் 'மா' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மம்தா
இத்திட்டத்தின் கீழ், சாப்பாடு, தால், காய்கறி, முட்டைக் குழம்பு ஆகியவை 5 ரூபாய்க்கு வழங்கப்படவுள்ளது. ஒரு பிளேட் உணவுக்கான மானிய தொகை 15 ரூபாயை மாநில அரசே ஏற்கும் என மம்தா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "சுய உதவி குழுக்கள் மூலம் தயாரிக்கப்படும் இந்த உணவு தினமும் மதியம் 1 மணி முதல் 3 வரை வழங்கப்படும். இத்திட்டத்தை செயல்படுத்தும் வகையில் மாநிலம் முழுவதும் காண்டீன் அமைக்கப்படும் என்றார்