தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குழப்பம் மேல் குழப்பம்... நந்திகிராம் யாருக்கு? - மேற்கு வங்கம் தேர்தல்

கொல்கத்தா: நந்திகிராம் தொகுதியில் வெற்றிப்பெற்றது மம்தாவா? சுவந்து அதிகாரியா? என்ற குழப்பத்திற்கு எண்ட் கார்ட் இல்லாமல் தவித்து வரும் மேற்கு வங்க மக்கள்.

Mamata
கொல்கத்தா

By

Published : May 2, 2021, 8:31 PM IST

மேற்கு வங்கத்தில் நந்திகிராம் தொகுதியில் முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கும், பாஜக சார்பில் போட்டியிட்ட அவரது முன்னாள் உதவியாளர் சுவேந்து அதிகாரிக்கும் இடையே கடும் போட்டி இருந்தது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே மம்தா பின்தங்கியிருந்தார்.

தொடர்ந்து 13 சுற்றுகளாக பின்னடைவை சந்தித்த அவர், 14 ஆவது சுற்றின் முடிவில் திடீரென முன்னிலை வகிக்க தொடங்கினார். தொடர்ந்து, அவர் 1200 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றுவிட்டதாக அறிவிப்பு வெளியானது.

இதனையடுத்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

மம்தாவின் கர்ஜனை ஒலிக்க தொடங்கியது என கட்சி தொண்டர்கள் ஆரவாரமாக கொண்டாட தொடங்கிய நிலையில், திடீரென சுவந்து அதிகாரி முன்னிலை பெற்று வெற்றிப்பெற்றுவிட்டார் என அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, மக்கள் தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ள மம்தா பானர்ஜி, வாக்கு எண்ணிக்கையை மீண்டும் நடத்த வேண்டுமென தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தினார்.

ஒருவழியாக தேர்தல் குழப்பம் முடிவுக்கு வந்தது என மேற்கு வங்க மக்கள் பெருமூச்சு விடுவதற்குள், கடைசி சுற்று வாக்கு எண்ணிக்கை மீண்டும் எண்ணப்பட்டு வருவதாகவும், மம்தா தோல்வி அடையவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. நந்திகிராமில் வெற்றிபெற்றது யார் என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இறுதியாக கிடைத்த அறிவிப்பில், 1000 வாக்குகள் முன்னிலையில் மம்தா உள்ளார்.

இதற்கிடையில், அகில இந்திய திருணமூல் காங்கிரஸ் தனது ட்விட்டரில், நந்திகிராமில் இன்னமும் வாக்கு எண்ணிக்கை நிறைவடைவில்லை. பொய்யான தகவல்கள் ஊக்கவிக்க வேண்டாம் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

மம்தா தனது தொகுதியில் வெற்றிபெறவில்லை என்றாலும், 200க்கும் மேற்பட்ட இடங்களில் திருணமூல் காங்கிரஸ் கட்சி கைப்பற்றி ஆட்சியை தக்கவைத்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details