தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஓபிசி இடஒதுக்கீட்டில் அதிகப்படியான இஸ்லாமியர்கள்: பாஜக குற்றச்சாட்டு - West Bengal Police news

மேற்கு வங்கத்தில் உதவி ஆய்வாளர் பணிக்கு ஓபிசி இடஒதுக்கீட்டில், தேர்வானவர்களின் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், ஓபிசி இடஒதுக்கீட்டில் அதிகப்படியான இஸ்லாமியர்களின் பிரதிநிதித்துவம் இருப்பது அதிர்ச்சியளிப்பதாக பாஜக தெரிவித்துள்ளது.

mamata-govt-denied-hindus-obcs-of-their-fair-share-of-quota-bjp
ஓபிசி இடஒதுக்கீட்டில் அதிகப்படியான இஸ்லாமியரகள்: பாஜக குற்றச்சாட்டு

By

Published : Jun 21, 2021, 6:40 AM IST

டெல்லி:மேற்குவங்கத்தில் உதவி ஆய்வாளர் பணிக்கான தேர்வு சில மாதங்களுக்கு முன்பு நடந்து முடிந்தது.

தற்போது, அத்தேர்வுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், வகுப்பு வாரியாக தேர்வானவர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஓபிசி -அ இடஒதுக்கீட்டில் தேர்வானவர்களில் பெரும்பாலும் இஸ்லாமியர்கள் என்பதை சுட்டிக்காட்டி, இந்துக்களின் ஓபிசி இடஒதுக்கீட்டை மம்தா அரசு மறுத்துள்ளதாக பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக ட்வீட் செய்துள்ள அக்கட்சியின் தேசியப் பொறுப்பாளர் மால்வியா, ஓபிசி-அ(மிகவும் பிற்படுத்தப்பட்டோர்) பிரிவில் உள்ள 80 சமூகங்களில் இஸ்லாமிய சமூகங்கள் 72 உள்ளன என்றும், ஓபிசி-ஆ (பிற்படுத்தப்பட்டோர்) பிரிவில் 40 இஸ்லாமிய சமூகங்கள் உள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், ஓபிசி பிரிவில், இஸ்லாமியர்களுக்கு அதிகப்படியான பிரதிநிதித்துவம் அளித்திருப்பது அதிர்ச்சியளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:'பாஜக தொண்டர்கள் மேற்குவங்கம் செல்ல தயாராக இருக்க வேண்டும்' - அண்ணாமலை

ABOUT THE AUTHOR

...view details