தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மேற்கு வங்கம் தேர்தல்: மம்தா பானர்ஜி பின்னடைவு - mamata

மேற்கு வங்கம் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி பின்னடைவைச் சந்தித்துள்ளார்.

mamata banerjee
மம்தா பானர்ஜி

By

Published : May 2, 2021, 9:42 AM IST

மேற்கு வங்க சட்டபேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் திருணாமூல், பாஜக, இடதுசாரிகள்-காங்கிரஸ் கூட்டணி இடையே மும்முனைப் போட்டி நிலவி வருகிறது. மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 292 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது.

மொத்தம் 108 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவருகிறது. தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவடைந்த நிலையில், தற்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நந்திகிராம் தொகுதியில் வெளியான முதற்கட்ட முடிவுகளில் மம்தா பானர்ஜி பின்னடைவைச் சந்தித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவரை எதிர்த்து களம் கண்ட பாஜகவின் சுவேந்து அதிகாரி முன்னிலை வகித்து வருகிறார்.

இதையும் படிங்க:5 மாநில வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரம்!

ABOUT THE AUTHOR

...view details