கொல்கத்தா:மேற்கு வங்க மாநிலத்தில் எட்டு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்தது. இதில், மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டு, பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் தோல்வி அடைந்தார். இருப்பினும், அதிக தொகுதிகளில் திருணமூல் காங்கிரஸ் வெற்றிபெற்று, மம்தா பானர்ஜி முதலமைச்சராகப் பெறுப்பேற்றார்.
அதனால், மம்தா பானர்ஜி ஆறு மாதத்திற்குள் மீண்டும் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினராக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே, மேற்கு வங்கத்தில் காலியாக உள்ள மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வரும் 30ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த இடைத்தேர்தலில் மம்தா பானர்ஜி, பபானிபூர் தொகுதியில் போட்டியிடுவார் என்று திருணமூல் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.