தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 27, 2021, 5:40 PM IST

ETV Bharat / bharat

பிரதமரை சந்தித்தார் மம்தா பானர்ஜி

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு பிரதமர் மோடியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி சந்தித்து பேசினார்.

mamata-banerjee-met-prime-minister-modi-in-delhi-today
mamata-banerjee-met-prime-minister-modi-in-delhi-today

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார். மேற்கு வங்கம் மாநிலத்துக்கு ஒன்றிய அரசு செலுத்தவேண்டிய நிலுவைத் தொகை, கூடுதல் தடுப்பூசிகள் குறித்து இந்த சந்திப்பில் பேசினார்.

நடந்து முடிந்த மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு பிரதமர் மோடியை அதிகாரப்பூர்வமாக மம்தா முதல் முறையாக சந்திக்கிறார். முன்னதாக யாஷ் புயல் காரணமாக மோடி மேற்குவங்கம் வந்தபோது அவரை பார்த்துவிட்டு மம்தா உடனே சென்றுவிட்டார்.

இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இன்று பிரதமரை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். கரோனா தொற்று காரணமாக மாநிலத்துக்கு தேவையான மருந்துகள், தடுப்பூசி பிரச்னை குறித்து பேசினேன். மாநிலத்தின் பெயர் மாற்றம் தொடர்பான பிரச்னை குறித்தும் பேசினேன்" என்றார்.

இந்த மூன்று நாள் டெல்லி பயணத்தில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரையும் மம்தா சந்திக்கிறார்.

இதையும் படிங்க:Phone surveillance: நாட்டிலேயே முதல்முறையாக விசாரணை ஆணையத்தை உருவாக்கிய மம்தா

ABOUT THE AUTHOR

...view details