தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Opposition Unity Meet in Bengaluru: கர்நாடகாவில் எதிர்கட்சித் தலைவர்கள் கூட்டம் - மதிமுக, விசிக பங்கேற்பு? - பாஜக

பெங்களூருவில் நடைபெற உள்ள இரண்டாவது எதிர்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்குமாறு எதிர்கட்சிகள் தலைவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அழைப்பு விடுத்துள்ளார்.

Opposition Unity Meet in Bengaluru
Opposition Unity Meet in Bengaluru

By

Published : Jul 12, 2023, 7:57 AM IST

பெங்களூரு (கர்நாடகா):15க்கும் மேற்பட்ட கட்சிகள் பங்கேற்ற முதல் எதிர்கட்சி ஒற்றுமைக் கூட்டம் கடந்த ஜூன் 23ஆம் தேதி பாட்னாவில் நடைபெற்றது. அந்த கூட்டத்தை பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் கூட்டி இருந்தார். இந்த நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வருகிற 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் இரண்டாவது எதிர்கட்சி ஒற்றுமைக் கூட்டம் காங்கிரஸால் கூட்டப்படுகிறது.

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக பாஜகவுக்கு எதிராக ஐக்கிய முன்னணியை வலுப்படுத்தும் இந்த எதிர்கட்சிகளின் முயற்சிகளுக்கு புதிதாக எட்டு கட்சிகள் தங்கள் ஆதரவை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. பிகார் மாநிலம் பாட்னாவில் கடந்த மாதம் நடைபெற்ற எதிர்கட்சிகளின் கூட்டத்திற்குப் பிறகு, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெறும் இரண்டாவது கூட்டத்தில் 24 அரசியல் கட்சிகளின் உயர்மட்டத் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், கொங்கு தேச மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி (RSP), அகில இந்திய பார்வர்டு பிளாக், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML), கேரள காங்கிரஸ் (ஜோசப்) மற்றும் கேரள காங்கிரஸ் (மணி) ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், எதிர்கட்சிகள் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றத் தலைவர் சோனியா காந்தியும் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2014 நாடாளுமன்றத் தேர்தலின்போது, கொங்கு தேச மக்கள் கட்சி மற்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவை பாஜகவின் கூட்டணிக் கட்சிகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, காங்கிரஸ் தலைவரும், ராஜ்யசபா எதிர்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, பெங்களூருவில் நடைபெற உள்ள இரண்டாவது எதிர்கட்சிகளின் ஒற்றுமைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு எதிர்கட்சிகளின் உயர்மட்டத் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து காங்கிரஸ் தலைவர் எதிர்கட்சித் தலைவர்களுக்கு எழுதிய கடிதத்தில், “நமது ஜனநாயக அரசியலுக்கு அச்சுறுத்தலான பல்வேறு முக்கியப் பிரச்னைகளை நாங்கள் விவாதித்து, அடுத்த பொதுத் தேர்தலை ஒற்றுமையாகப் போராடுவது குறித்து ஒருமனதாக உடன்படிக்கைக்கு வந்ததால், இந்த சந்திப்பு பெரும் வெற்றி பெற்றது” என்று பாட்னாவில் நடைபெற்ற முதல் எதிர்கட்சி கூட்டத்தை நினைவு கூர்ந்தார்.

மேலும், “இந்த விவாதங்களைத் தொடர்வதும், நாம் உருவாக்கியதை மேலும் கட்டியெழுப்புவதும் முக்கியம் என்று நான் நம்புகிறேன். நமது நாடு எதிர்கொள்ளும் சவால்களுக்கு தீர்வு காண நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அதன் தொடர்ச்சியாக, ஜூலை 17 அன்று மாலை 6 மணிக்கு பெங்களூருவில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். கூட்டம் ஜூலை 18, 2023 அன்று காலை 11 மணி முதல் தொடரும். உங்களை பெங்களூருவில் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” என மல்லிகார்ஜூன கார்கே எதிர்கட்சித் தலைவர்களுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத், எதிர்கட்சிகளின் கூட்டத்திற்காக பெங்களூரு செல்ல உள்ளதாக வியாழக்கிழமை தெரிவித்திருந்தார். 15க்கும் மேற்பட்ட கட்சிகள் பங்கேற்ற முதல் எதிர்கட்சி ஒற்றுமைக் கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அதானியின் ஊழல் குறித்து வாய் திறக்க மறுக்கும் பிரதமர் மோடியும்.. ஆ.ராசா கடும் தாக்கு!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details