திருவனந்தபுரம் (கேரளா): கேரளாவின் பழம்பெரும் திரைப்பட இயக்குநரான கே.ஜி. ஜார்ஜ், தனது 77-வது வயதில் கொச்சியில் உள்ள காக்கநாட்டில் உள்ள முதியோர் இல்லத்தில் இன்று (செப்.24) மரணமடைந்தார். இவர் மலையாளத் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர். புதுமையான கதையம்சம் கொண்ட இவரது படங்கள் ரசிகர்களுக்கு பிற படங்களில் இருந்து புதுமையான திரை அனுபவத்தை அளித்தது. கே.ஜி.ஜார்ஜின், ‘பஞ்சவடி பழம்’ திரைப்படம் அவரது இயக்கத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
கே.ஜி.ஜார்ஜ் கேரளாவின் பத்தினம்திட்டா என்னும் இடத்தில் பிறந்தவர். இவர் 1975-ஆம் ஆண்டு வெளியான ஸ்வப்னதானம் என்னும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இந்த படம் சிறந்த மலையாள படத்திற்கான விருதைப் பெற்றது. பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ள இவர், 9 முறை கேரள அரசின் விருதினையும் வென்றுள்ளார்.
இதையும் படிங்க: துல்கர் - வெங்கி அட்லூரி இணையும் "லக்கி பாஸ்கர்" பூஜையுடன் தொடங்கியது!