தெலங்கானா மாநிலம் ரெங்கா ரெட்டி மாவட்டம் செவெல்லா மண்டலம் என்னும் பகுதியில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக எதிரே வந்த ஆழ்துளை வாகனம் மீது மோதியது.
இந்த விபத்தில், காரிலிருந்த ஆறு வயது குழந்தை உள்பட ஏழு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், உயிருக்குப் போராடிய நிலையிலிருந்த மூன்று பேரை மீட்ட அப்பகுதி மக்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.