தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிகார் புயலில் சிக்கி 27 பேர் பலி! - பிகார் புயலில் சிக்கி 27 பேர் பலி

பிகார் மாநிலத்தில் புயல், கனமழையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது.

பிகார் புயலில் சிக்கி 27 பேர் பலி!
பிகார் புயலில் சிக்கி 27 பேர் பலி!

By

Published : May 20, 2022, 7:10 AM IST

பாட்னா(பிகார்): பிகாரில் வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள ஆரஞ்சு எச்சரிக்கையை அடுத்து, அங்கு கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. மாநிலம் முழுவதும் மழை மற்றும் புயல் காரணமாக பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. அம்மாநில அரசு அளித்த தகவலின்படி, மாநிலத்தில் இதுவரை 27 பேர் புயல் காரணமாக இறந்துள்ளனர். அதேநேரம், 24க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்த பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மேலும் புயலின் தாக்கம் அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது. புயலால் கண்டெய்னர் லாரி சாலையில் கவிழ்ந்தது, படகு ஆற்றில் சிக்கியது மற்றும் ராஜ்தானி உள்ளிட்ட பல ரயில்கள் புயலில் சிக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. புயலின் தாக்கம் காரணமாக ஒரு சில விமான சேவையும் பாதிக்கப்பட்டது. பகல்பூர் உள்ளிட்ட மாநிலத்தின் பல மாவட்டங்களில் சாலை விபத்து காரணமாக நெரிசல் ஏற்பட்டது.

புயல் காரணமாக அங்கு கனமழை பெய்து வருகிறது. பலர் புயலில் சிக்கி தவித்து வருகின்றனர். தாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நிவாரண பணிகள் விடப்பட்டுள்ளன.

இதையும் படிங்க:அஸ்ஸாமில் வெள்ளப்பெருக்கு- 4 லட்சம் மக்கள் பாதிப்பு

ABOUT THE AUTHOR

...view details