ஜாம்ஷெட்பூர் (ஜார்க்கண்ட்):ஜாம்ஷெட்பூர் டாட்டா இரும்பு ஆலையில் எரிவாயு செல்லும் பாதையில் திடிரென வெடிப்பு ஏற்பட்டு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
இதனையடுத்து அங்கு இருந்த 3 தொழிலாளர்களுக்கு பெருங்காயம் ஏற்பட்டது. டாட்டா நிறுவனம் அளித்த தகவலின் படி அலுவலர்களின் கூற்றுப்படி, ஆலையின் பேட்டரி எண் ஆறு மற்றும் 7ஆவது லைனில் எரிவாயு கட்டிங் மற்றும் வெல்டிங் செய்து கொண்டிருந்தபோது எரிவாயு கசிவு வெளிப்பட்டு வெடித்தது.
அதைத் தொடர்ந்து தீப்பிடித்தது. தொழிற்சாலையில் இருந்து வெகு தொலைவில் வெடிச்சத்தம் கேட்டதாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கூறினர். இதனையடுத்து ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், ஜாம்ஷெட்பூர் மாவட்ட நிர்வாகம் மூலம் வேண்டிய மருத்துவ உதவிகளை செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
தற்போது வரை கேஸ் லைனில் 6ஆவது வரிசையில் ஏற்பட்ட வெடிப்பின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் முழு காரணமும் வெளியாகவில்லை.
இதையும் படிங்க: மத்தியப் பிரதேசத்தில் பயங்கர தீ விபத்து - 7 பேர் உடல் கருகி பலி!