தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ரூ.1,200 கோடி மதிப்புள்ள போதைப்பொருள்கள் பறிமுதல்... டெல்லி போலீசார் அதிரடி நடவடிக்கை! - ஹெராயின்

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த இரண்டு ஆப்கானியர்களை டெல்லி சிறப்புப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1,200 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Major
Major

By

Published : Sep 6, 2022, 9:45 PM IST

டெல்லி: டெல்லியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த ஆப்கானியர்கள் இருவரை டெல்லி சிறப்புப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து மிகவும் ஆபத்தான மெத்தாம்பேட்டமைன், ஹெராயின் உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்து பேசிய காவல்துறை சிறப்பு பிரிவு ஆணையர் தாலிவால், "கைதான ஆப்கானியர்கள் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் வசித்து வந்தனர். அவர்களிடமிருந்து சுமார் 312 கிலோ மெத்தாம்பேட்டமைன் மற்றும் 10 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.

லக்னோவில் உள்ள கிடங்கு ஒன்றிலிருந்து இந்த போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த போதைப்பொருள்களின் மதிப்பு 1,200 கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும். இந்தியாவில் இதுவரை நடந்த மெத்தாம்பேட்டமைன் பறிமுதல் நடவடிக்கைகளில், இது மிகவும் முக்கியமானது" என்று கூறினார்.

மெத்தாம்பேட்டமைன் மிகவும் மோசமான போதைப்பொருள். இது மிகவும் மோசமாக விளைவுகளை ஏற்படுத்தும். இதை அதிகளவு உட்கொண்டால் மரணம்கூட ஏற்படக்கூடும்.

இதையும் படிங்க: இந்தியாவின் மிகப்பெரிய கார் திருடன் டெல்லியில் கைது

ABOUT THE AUTHOR

...view details