தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உ.பி.யில்., கடும் பனிமூட்டம் - அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி விபத்து

லக்னோ: கடும் பனி காரணமாக ஆக்ரா-லக்னோ அதிவேக நெடுஞ்சாலையில் ஐந்து வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் 13 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

லக்னோ
லக்னோ

By

Published : Jan 18, 2021, 9:25 AM IST

உத்தரப் பிரதேசம் மாநிலம் ஆக்ரா-லக்னோ அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (ஜனவரி 18) அதிகாலை பனி மூட்டம் அதிகளவில் காணப்பட்டது. இதனால், அவ்வழியே வந்த வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அப்போது, அங்கு வேகமாக வந்த கார் ஒன்று, நெடுஞ்சாலையில் நின்றுக்கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. அச்சமயத்தில், காருக்கு பின்னால் வந்த மூன்று வாகனங்களும் அடுத்தடுத்து மோதின.

லாரி மீது மோதிய கார் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதை பார்த்த காரில் பயணித்தவர்கள, அலறியடித்து ஓடினர். தீ மளமளவென அனைத்து வாகனங்களிலும் பரவ தொடங்கியது. தகவலறிந்த காவல் துறையினர், தீயணைப்பு துறையினர் உடனடியாக சம்பவ இடம் விரைந்தனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். படுகாயமடைந்த 13 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நல்வாய்ப்பாக உயிர் சேதம் ஏற்படவில்லை.

மேலும், கார் மற்றும் லாரி ஓட்டுநர்கள் அங்கிருந்து ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. இவ்விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், இருவரையும் தேடி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details