தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் வாங்கினாரா மஹுவா மொய்த்ரா? பாஜக எம்.பி. மக்களவை சபாநாயகருக்கு கடிதம்! - திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா

நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க தொழிலதிபரிடம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பெண் எம்.பி. மஹுவா மொய்த்ரா பணம் வாங்கியதாக பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

Mahua Moitra
Mahua Moitra

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 15, 2023, 7:55 PM IST

டெல்லி : நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி மஹுவா மொய்த்ரா, தொழிலதிபர்களிடம் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வாங்குவதாக பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே மக்களவை சபாநாயகருக்கு கடிதம் எழுதி உள்ளார்.

பாஜ்க எம்பி நிஷிகாந்த் துபே, மக்களவை சபாநாயகருக்கு எழுதி உள்ள கடிதத்தில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பெண் எம்.பி மஹுவ மொய்த்ரா, நாடாளுமன்றத்தின் கேள்வி எழுப்ப தர்ஷன் ஹிரானன்தானி என்ற தொழிலதிபரிடம் பணம், பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை பெறுவதாக தெரிவித்து உள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பெண் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது நடவடிக்கை எடுக்குமாறு மக்களவை சபாநாயகருக்கு பாஜக எம்,பி நிஷிகாந்த் துபே கடிதம் எழுதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மஹுவா மொய்த்ரா - தொழிலதிபர் தர்ஷன் ஹிரானன்தானி இடையே நடந்த சட்டவிரோத பரிமாற்றங்கள் குறித்த ஆதாரங்கள் தனக்கு கிடைத்து உள்ளதாக நிஷிகாந்த் துபே அந்த கடிதத்தில் தெரிவித்து உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.

கடந்த நாடாளுமன்ற கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா 50 கேள்விகள் கேட்டு உள்ளதாகவும் அது அனைத்திற்கும் தொழிலதிபர் தர்ஷனிடம் இருந்து பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பெற்று இருப்பதாகவும் நிஷிகாந்த் துபே எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.

அதேநேரம், தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்து உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி மொஹுவ மொய்த்ரா, இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தினால் தான் வரவேற்பதாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

இதையும் படிங்க :Telangana Election 2023: சூடுபிடிக்கும் தெலங்கானா தேர்தல் களம்! மும்முரம் காட்டும் கே.சி.ஆர்.! திட்டம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details