டெல்லி:திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா பரபரப்புகளுக்கு பெயர் பெற்றவர். ஒவ்வொரு நாடாளுமன்ற அமர்வின் போது ஆளும்கட்சியை நோக்கி இவர் வீசும் கேள்விக் கணைகள் வலைத்தளங்களில் வைரலாக தவறுவதில்லை. இந்நிலையில் இவரை நோக்கி மற்றொரு எம்.பி. வைத்த புகாரால் இவர் வைரலாகி உள்ளார்.
மஹுவா மொய்த்ரா நாடாளுமன்றத்தில் பாஜகவிற்கு எதிராகவும், அதானி குழுமத்திற்கு எதிராகவும் கேள்வி கேட்பதற்கு தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனியிடம் இருந்து லஞ்சம் வாங்கியதாகவும், அதுகுறித்து விசாரித்து அவர் மீதி தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே, அது தொடர்பாக சபாநாயகர், மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் மற்றும் இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மஹுவா மொய்த்ரா மீது துபே வைத்த குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பிய நிலையில், துபே சபாநாயகருக்கு எழுதிய கடிதத்தை மஹுவா தனது X சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு அதற்கு விளக்கமளித்துள்ளார். அவரது பதிவில், “நாடாளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களது பணிகளும் அவர்களின் தனி உதவியாளர்கள், உதவியாளர்கள் உள்ளிட்ட பெரிய குழுவினரால் செய்யப்படுகிறது.