தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஹைதராபாத் கூட்டுறவு வங்கியின் சர்வர் ஹேக் செய்து 12 கோடி திருட்டு - ஹைதராபாத் கூட்டுறவு வங்கியின் சர்வர் ஹேக் செய்து 12 கோடி திருட்டு

இணைய திருட்டு மூலம் ஹைதராபாத் மகேஷ் கூட்டுறவு வங்கியின் சர்வர் திருடப்பட்டு 12 கோடி பணம் திருடப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஹைதராபாத்
ஹைதராபாத்

By

Published : Jan 25, 2022, 1:07 PM IST

ஹைதராபாத்: ஹைதராபாத் நகரை உலுக்கிய பெரிய இணைய திருட்டு ஒன்று நடந்துள்ளது. இணையம் மூலம் திருடும் கும்பல் ஒன்று ஹைதராபாத்தின் மகேஷ் கூட்டுறவு வங்கியின் சர்வர்களை ஹேக் செய்துள்ளது.

வங்கியின் புகாரை அடுத்து ஹைதராபாத்தின் சைபர் க்ரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் வங்கி கணக்கில் இருந்து 12 லட்சம் களவாடப்பட்டது தெரியவந்துள்ளது. மேற்க்கட்ட விசாரனையில் திருடப்பட்ட பணம் 100 வெவ்வேறு வங்கி கணக்குகளுக்கு அனுப்பபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

வங்கி கணக்கு சரிபார்ப்பின் போது இந்த உண்மை வெளிச்சதுக்கு வந்துள்ளது. வங்கியின் முக்கிய கிளைகளில் காவல் துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆந்திர பிரதேஷ மகேஷ் கூட்டுறவு வங்கி 4 மாநிலங்களில் மொத்தம் 45 கிளைகளை கொண்டுள்ளது. இதன் தலைமையகம் ஹைதராபாத்தில் உள்ளது.

இதையும் படிங்க:கரோனா சான்றிதழ் இல்லாதவர்களை திருப்பி அனுப்பும் திருப்பதி தேவஸ்தானம்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details