தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'நான் இந்தியில் நடிக்க மாட்டேன்' - நடிகர் மகேஷ் பாபு அதிரடி கருத்து! - நான் இந்தியில் நடிக்க மாட்டேன்

தெலுங்கு முன்னனி நடிகர் மகேஷ்பாபு, ’பாலிவுட் சினிமாவால் என்னை வாங்க முடியாது’ எனக் கூறியுள்ளார். இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

’நான் இந்தியில் நடிக்க மாட்டேன்’ - நடிகர் மகேஷ் பாபு கருத்து
’நான் இந்தியில் நடிக்க மாட்டேன்’ - நடிகர் மகேஷ் பாபு கருத்து

By

Published : May 11, 2022, 5:26 PM IST

ஹைதராபாத் (தெலங்கானா): தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு, அதிவ் சேஷின் ’மேஜர்’ திரைப்பட ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசினார். அப்போது இந்தி திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புள்ளதா என்று பத்திரிகையாளர் கேள்விக்கு, ’பாலிவுட்டால் என்னை வாங்க முடியாது. நான் இந்தி சினிமாவில் நடிக்க நேரமில்லை’ எனக் கூறினார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நேற்று நடிகர் அதிவ் சேஷின் நடித்த ‘மேஜர்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நடந்தது. அதில் கலந்து கொண்டு செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் அளித்த மகேஷ்பாபு, 'பாலிவுட் சினிமாவால் என்னை வாங்க முடியாது. என்னுடைய நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. தெலுங்கு சினிமாவே எனக்கு வசதியானதாக இருக்கிறது’ எனத் தெரிவித்தார். இது தற்போது பெரும் பேசு பொருளாகியுள்ளது.

மகேஷ்பாபுவின் கருத்திற்கு பலவிதமான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இருப்பினும் சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்து கமெண்டுகளை அடித்து வருகின்றனர். தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான மகேஷ்பாபு இவ்வாறு கூறியுள்ளதால் பாலிவுட் திரை இயக்குநர்கள் சற்று அதிர்ச்சியில் உள்ளனர்.

இதையும் படிங்க:குருவி படத்தை தயாரித்ததற்கு வருத்தப்பட்டாரா உதயநிதி? ஆர்.ஜே.பாலாஜி ஓபன் டாக்

ABOUT THE AUTHOR

...view details