தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் எம்எஸ் தோனியின் வருமானம் 30% உயரும்...?!

கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனியின் வருமானம், நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் சுமார் முப்பது விழுக்காடு அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

Dhoni
Dhoni

By

Published : Nov 9, 2022, 9:27 PM IST

ராஞ்சி: சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக மகேந்திர சிங் தோனி கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி அறிவித்தார். அதேநேரம் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றாலும், வணிகத்தில் தனது இன்னிங்சை அற்புதமாக விளையாடுகிறார்.

ஸ்போர்ட்ஸ் வேர், ஹோம் இன்டீரியர் நிறுவனம், கார்ஸ் 24 உள்ளிட்ட பல நிறுவனங்களில் அவர் முதலீடு செய்துள்ளார். ராஞ்சியில் சுமார் 43 ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். அண்மையில், கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்துடன் இணைந்து ட்ரோன் தயாரிப்பதற்காக முயற்சியைத்தொடங்கினார்.

பெங்களூருவில் 'எம்எஸ் தோனி சர்வதேச பள்ளி' தொடங்கப்பட்டுள்ளது. இது தவிர தோனியும் அவரது மனைவி சாக்ஷியும் இணைந்து, 'தோனி என்டர்டெயின்மென்ட்' என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கியுள்ளனர். இந்த நிறுவனம் தமிழில் ரமேஷ் தமிழ்மணி இயக்கும் முதல் படத்தை தயாரிப்பதாக அறிவித்துள்ளது.

வணிகம், தனிப்பட்ட வருவாய் என அவரது வருமானம் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு அதிகரித்துள்ளது. வருமான வரித்துறையின் புள்ளிவிவரங்கள்படி, கடந்த 2017-18ஆம் நிதியாண்டில் தோனி 12.17 கோடி ரூபாய் வரி செலுத்தியுள்ளார். 2019-20 மற்றும் 2018-19ஆம் ஆண்டுகளில், சுமார் 28 கோடி ரூபாயை வருமான வரியாகச் செலுத்தியுள்ளார்.

2020-21ஆம் நிதியாண்டில் சுமார் 30 கோடி ரூபாய் வரி செலுத்தியுள்ளார். 2021-22ஆம் ஆண்டில் 38 கோடி ரூபாயை வரியாக செலுத்தியுள்ளார். அதாவது, 2021-22ஆம் நிதியாண்டில் அவரது மொத்த வருமானம் சுமார் 130 கோடி ரூபாய்.

இந்த நிலையில், நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் அக்டோபர் வரை, இரு காலாண்டுகளில் வருமான வரித்துறையில் முன்பணமாக 17 கோடி ரூபாயை டெபாசிட் செய்துள்ளார். அதன்படி, இந்த நிதியாண்டின் இறுதிக்குள் அவரது வருமானம் சுமார் முப்பது விழுக்காடு அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: உலகின் சிறந்த வேலை அளிப்போர் தரவரிசை பட்டியலில் 20ஆவது இடத்தில் 'ரிலையன்ஸ் இந்தியா'

ABOUT THE AUTHOR

...view details