தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மராட்டிய இடைத்தேர்தலில் பாஜகவுக்கு அதிர்ச்சி அளித்த காங்கிரஸ்! - Kasba by election result

கஸ்பாப் பெத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரவீந்திர தாங்கேகர் 11 ஆயிரத்து 40 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார்.

இடைத்தேர்தல்
இடைத்தேர்தல்

By

Published : Mar 2, 2023, 2:20 PM IST

புனே: மகாராஷ்ரா மாநிலம் கஸ்பா பெத் சட்டமன்ற தொகுதிக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் ஆளும் பாஜக கூட்டணி கட்சியை வீழ்த்தி காங்கிரஸ் வேட்பாளர் ரவீந்திர தாங்கேகர் வெற்றி பெற்றார். பாஜக எம்.எல்.ஏ. முக்தா திலக் மறைவை தொடர்ந்து கஸ்பா பெத் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

தொகுதியை தக்கவைக்கும் குறிக்கோளுடன் களமிறங்கிய பாஜக, வேட்பாளராக ஹெமந்த் ரசானேவை நிறுத்தியது. இந்நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், பாஜக வேட்பாளர் ஹெமந்த் ரசானே, 61 ஆயிரத்து 771 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ரவீந்திர தாங்கேகர், 72 ஆயிரத்து 599 வாக்குகள் பெற்றார்.

இதன் மூலம் காங்கிரஸ் வேட்பாளர் ரவீந்திர தங்கேகர், 11 ஆயிரத்து 40 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று பாஜகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். தேர்தல் வெற்றிக்காக பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டு இருந்த பாஜகவுக்கு இந்த தோல்வி பெருத்த ஏமாற்றம் எனக் கூறப்படுகிறது.

மறைந்த எம்.எல்.ஏ. முக்தர் திலக் குடும்பத்தை சேர்ந்த ஒருவர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சம்பந்தமில்லாமல் ஹெமந்த் ரசானேவை வேட்பாளராக பாஜக அறிவித்தது, அந்த தொகுதியில் பெரும்பான்மையான பிராமண சமூகத்தினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாகவும் அதன் வெளிப்பாடாக தேர்தல் தோல்வி அமைந்ததாகவும் கூறப்படுகிறது.

தேர்தல் பிரசாரத்தின் போது ஏக்நாத் சிண்டே தலைமையிலான சிவ சேனா அணியின் எம்.எல்.ஏ.க்கள், எம்.பிக்கள், பாஜக மூத்த தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போதும் தேர்தலில் தோல்வி ஏற்பட்டது அந்த கூட்டணிக்கு ஜீரணிக்க முடியாத ஒன்றாக இருப்பதாக கூறப்படுகிறது.

மற்றொரு இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதியான சின்ச்வாட்டில், பாஜக வேட்பாளர் அஸ்வினி ஜெகதாப் ஏறத்தாழ் 5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தேசியவாத காங்கிரஸ் கட்சி வேட்பாளர் நானா கேட் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார்.

இதையும் படிங்க:ஜி20 மாநாடு அலங்காரத்திற்கு வைத்த பூந்தொட்டிகளை திருடியவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details