நாக்பூர்:உலக முழுவதும் இந்த வாரம் காதலர் தின வாரமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அந்த காதலுக்கே மகாராஷ்டிரத்தை சேர்ந்த தம்பதி புனிதம் சேர்த்துள்ளனர். கணவருக்காக மனைவி எந்த எல்லைக்கும் செல்வாள் என்பதை மீண்டும் ஒரு முறை வரலாற்றி நிரூபணமாகி உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சச்சின் - சோனி தம்பதி. பருத்தி வியாபாரியான சச்சின் எச்.ஐ.வி பாசிடிவ் நோயாளி ஆவார். அவரது மனைவி சோனிக்கும் எச்.ஐ.வி தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. கடந்த 2008ஆம் ஆண்டு முதல் எச்.ஐ.விக்காக ஆன்டிரிடிரோவைரல் சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.
தொடர் மருத்துவம், ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களில் சச்சின் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. உடல் நலக்கோளாறால் அவதிப்பட்டு வந்த சச்சின் கடந்த 2019ஆம் ஆண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், கிட்னி செயலிழந்து விட்டதாக அதிர்ச்சிகர தகவலை தெரிவித்துள்ளனர்.
கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சச்சினின் கிட்னி முற்றிலும் செயலிழந்ததாக சொல்லப்படுகிறது. அவருக்கு கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் திட்டமிட்ட நிலையில், அவரது உடலுக்கு பொருந்தும் வகையிலான கிட்னியை தேடும் முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டனர்.