மும்பை: இந்தி தொலைக்காட்சி நடிகையான உர்ஃபி ஜாவேத்(25), இன்ஸ்டாகிராம், பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மிகவும் ஆட்டிவாக இருப்பவர். சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்க்க அறைகுறையாக ஆடைகளை அணிந்து புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிடுவார் நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்.
ஃபேஷன் முயற்சி என்ற பெயரில் பிளேடுகள், இரும்புச் சங்கிலிகள், மின்சார கம்பிகள், செல்போன் உள்ளிட்டவற்றாலான உடைகளை அணிந்து வீடியோ வெளியிடுவதும் வழக்கம். இவர் எந்த ட்ரோலுக்கும் அசராமல் தனது வேலையை செய்து வருகிறார்.