தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

’தடுப்பூசியால் மீண்டும் பார்வை கிடைத்தது’ - மகாராஷ்டிராவில் பரவும் புரளி! - Covid Vaccien rumors

மகாராஷ்டிராவில் 70 வயது பாட்டி ஒருவர் தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் தனக்கு மீண்டும் பார்வை கிடைத்ததாகக் கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார்.

மாத்ருபாய் தேவி
மாத்ருபாய் தேவி

By

Published : Jul 8, 2021, 4:50 PM IST

மகாராஷ்டிர மாநிலம், வாசிம் மாவட்டத்தில் உள்ள பென்தர்வாடியில் வசிக்கும் 70 வயது பாட்டி மாத்ருபாய் தேவி. இவர் ஜூன் 26ஆம் தேதி கோவிட்-19 தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளார்.

இந்தப் பாட்டிக்கு பத்தாண்டுகளுக்கு முன் கண் புரை நோய் காரணமாக பார்வை பறிபோனது. இந்நிலையில், தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின், தனக்கு மீண்டும் பார்வை கிடைத்து விட்டதாக பாட்டி பரவசத்துடன் உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்த ஆச்சரியத்தை அவர்களது உறவினர்களாலும் நம்ப முடியவில்லை. இதையடுத்து மருத்துவரை தொடர்பு கொண்டு சம்பவத்தை தெரிவித்துள்ளனர். இதையடுத்து பாட்டியை பரிசோதித்த மருத்துவர், தடுப்பூசிக்கும் இந்நிகழ்வுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு உரிய விளக்கத்தை அளிக்கிறோம் எனவும் அவர்கள் கூறியுள்ளார்.

தடுப்பூசியால் பார்வை கிடைத்துவிட்டது என்ற புரளி தற்போது மகாராஷ்டிரா முழுவதும் பரவி வருகிறது. இதன்மூலம் அங்குள்ள சில கிராமங்களில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் ஆர்வம் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:டோக்கியோவில் அவசரநிலை ஊரடங்கு: பார்வையாளரின்றி ஒலிம்பிக் 2020?

ABOUT THE AUTHOR

...view details