மும்பை:மகராஷ்டிராவில் உள்ள பெண்கள் "வாட் பூர்ணிமா" என்னும் வேண்டுதலை அடிக்கடி செய்வது வழக்கம். அதாவது, தமிழ்நாட்டில் பெண்கள் குழந்தை வரம் வேண்டி ஆல மரத்தை சுற்றிவருவதுபோல மகராஷ்டிராவில் இந்த ஜென்மத்தில் தனக்கு கிடைத்த கணவன் ஏழு ஜென்மத்துக்கும் கிடைக்க வேண்டும் என்று சுற்றிவருவார்கள்.
இந்த வேண்டுதலை அவுரங்காபாத்தில் உள்ள 8 ஆண்கள் செய்துவருகின்றனர். ஆனால், அவர்களது வேண்டுதல் பெரும் வியப்பை உண்டாக்கும்படி உள்ளது. ஏனென்றால், அடுத்த ஜென்மத்தில் இப்படிப்பட்ட துன்புறுத்தும் மனைவி வேண்டவே வேண்டாம் என்று வேண்டுதல் வைத்து மரத்தை சுற்றிவருகின்றனர்.
இதனை பல மாதங்களாகவே செய்துவருகின்றனர். இதுகுறித்து அவர்களிடம் கேட்கையில், நாங்கள் அனைவரும் மனைவியால் துன்புறுத்தப்பட்டுள்ளோம். மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளோம். இப்படிப்பட்ட மனைவி எங்களுக்கு ஏழு ஜென்மங்கள் இல்லை. ஏழு வினாடிகள் கூட வேண்டவே வேண்டாம். இதற்காகவே ஆல மரத்தை சுற்றி வேண்டுதல் வைத்து வருகிறோம்.
எங்களுக்கு திருமணமான ஆண்கள் மத்தியில் ஆதரவு கிடைத்துவருகிறது. அதோடு மனைவியால் துன்புறுத்தப்படும் ஆண்களுக்கு சங்கத்தின் மூலம் ஆதரவளிக்க உள்ளோம்" என்று தெரிவிக்கின்றனர். இந்த சங்கத்திற்கு அட்வா என்பவர் தலைவர் என்றும் பாரத் புலாரே, பவுசாகேப் சாலுங்கே, பாண்டுரங் கந்துலே, சோம்நாத் மணால், சரண் சிங், பிக்கன் சந்தன், சஞ்சய் பந்த், பாங்கர் உள்ளிட்டோர் உறுப்பினர்கள் என்றும் சொல்லிக்கொள்கின்றனர்.
இதையும் படிங்க:இரண்டாவது நாளாக விசாரணைக்கு ஆஜரான ராகுல் காந்தி