தீபத்திருநாளாம் தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரையிலும் புத்தாடை அணிந்து, இனிப்பு சாப்பிட்டு, பட்டாசு வெடித்து மகிழ்வது வழக்கம். பல வகையான தள்ளுபடிகள் அறிவிக்கப்படுவதால் நகைகள் வழங்குவதும் உண்டு. அந்த வகையில், மகாராஷ்டிரா மக்களுக்கு தீபாவளியில் இனிப்பு வாங்கினால் தங்கமும் டபுள் டமாகாவாக கிடைக்கிறது.
அமராவதியில் ரகுவீர் என்ற ஸ்வீட் ஷாப் உள்ளது. இங்கு கடை உரிமையாளர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வாடிக்கையாளர்களுக்கு ஸ்பெஷல் ஸ்வீட் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார். சோனேரி போக் என பெயரிட்டுள்ள இந்த ஸ்வீட் ஒரு கிலோ 7 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இது பிஸ்தா மற்றும் பாதாம் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, ஹேசல்நட், குங்குமப்பூ ஆகியவற்றையும் இணைத்துள்ளனர். எல்லாவற்றுக்கும் மேலாக, இனிப்பு தங்க ஸ்ட்ரெப் கொண்டு சுற்றப்பட்டுள்ளது.