தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மகாராஷ்டிராவில் தொற்று 41 ஆயிரமாக உயர்வு; பள்ளிகள் தொடர்ந்து மூடல்

மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் கரோனா தொற்று 41 ஆயிரத்து 434 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், 1,009 பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிராவில் தொற்று 41 ஆயிரமாக உயர்வு
மகாராஷ்டிராவில் தொற்று 41 ஆயிரமாக உயர்வு

By

Published : Jan 8, 2022, 11:07 PM IST

மும்பை: கரோனா, ஒமைக்ரான் தொற்று வகைகள் இந்தியா முழுவதும் மீண்டும் வேகமாகப் பரவிவருகிறது. தொற்றுப் பரவலைத் தடுக்கும்விதமாக, வார இறுதி ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் அறிவித்துவருகின்றன.

இருப்பினும், நாள்தோறும் தொற்று பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துகொண்டே வருகிறது. தொற்றுகளால் அதிக பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா மாநிலம் உள்ளது.

இந்நிலையில், இன்றைய தினம் (ஜனவரி 8) மகாராஷ்டிராவில் 41 ஆயிரத்து 434 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால், ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 238 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கடந்த 24 மணிநேரத்தில் 9 ஆயிரத்து 671 பேருக்குத் தொற்றிலிருந்து குணமடைந்துள்ள நிலையில், 13 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 41 ஆயிரத்து 627 ஆக உயர்ந்துள்ளது.

ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று 1006 ஆகப் பதிவாகியுள்ளது. இதனால், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ஊரடங்கு வழிமுறைகளைத் தொடர மகாராஷ்டிர அரசு முடிவெடுத்துள்ளது. மேலும், வரும் ஜனவரி 10ஆம் தேதி முதல் இரவு 11 மணி முதல் காலை 5 மணிவரை இரவுநேர ஊரடங்கை அரசு அமல்படுத்த உள்ளது. மேலும், பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், பிப்ரவரி 15ஆம் தேதி வரை பள்ளிகளை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மீண்டும் வேகமெடுக்கும் கரோனா: தலைநகரில் 20 ஆயிரத்தை தாண்டும் தொற்று பாதிப்பு

ABOUT THE AUTHOR

...view details