தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மூன்று ஆண்டுகளில் 15,000 குழந்தை திருமணங்கள் - child marriage in india

மகாராஷ்டிராவில் மூன்று ஆண்டுகளில் மட்டும் 15,000 குழந்தை திருமணங்கள் நடந்துள்ளன. அதோடு ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக உயிரிழக்கும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.

maharashtra-registered-15000-child-marriages-in-last-three-years
maharashtra-registered-15000-child-marriages-in-last-three-years

By

Published : Apr 27, 2022, 10:57 AM IST

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் குழந்தை திருமணத் தடுப்புச் சட்டம் முறையாக அமல்படுத்தப்படவில்லை என்று பல்வேறு பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. இதுதொடர்பான விசாரணையில் உயர் நீதிமன்றம் குழந்தை திருமணங்கள் குறிந்த புள்ளிவிரவங்களை தாக்கல் செய்யுமாறு அரசுக்கு உத்தரவிட்டது.

அதனடிப்படையில் அரசு தாக்கல் செய்த அறிக்கையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் 15,000 குழந்தைத் திருமணங்கள் நடந்துள்ளன. இவற்றில் பெரும்பாலானவை பழங்குடியின மாவட்டங்களில் நடந்துள்ளன. 1,541 திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

அதோபோல, பழங்குடியின மாவட்டங்களில் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக உயிரிழக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து நீதிபதி, பழங்குடியின மாவட்டங்களில் 3 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்து ஆய்வு நடத்த உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:கிருஷ்ணகிரியில் 7 ஆண்டுகளில் 290 குழந்தைத் திருமணம்

ABOUT THE AUTHOR

...view details