தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மகாராஷ்டிராவில் பெண் காவலர்களின் பணிநேரம் குறைப்பு.. தாக்கரே அரசு நடவடிக்கை! - பெண் காவலர்களின் பணிநேரம் குறைப்பு

மகாராஷ்டிராவில் பெண் காவலர்களின் பணி நேரத்தை 8 மணி நேரமாக குறைத்து உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அரசு முடிவெடுத்துள்ளது.

female cops
female cops

By

Published : Jan 29, 2022, 6:29 PM IST

மும்பை : மகாராஷ்டிரா மாநில பெண் காவலர்கள் 8 மணி நேரம் பணி செய்தால் போதும் என மாநில அரசு சனிக்கிழமை (ஜன.29) உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து வெளியான அறிவிப்பில், “பெண் காவலர்களின் நலன் கருதி மாநில அரசு பணி நேரத்தை 12 மணி நேரத்தில் இருந்து 8 மணி நேரமாக குறைத்துள்ளது.

அடுத்த அறிவிப்பு வரும்வரை பெண் காவலர்கள் 8 மணி நேரம் மட்டும் பணி செய்தால் போதும். இந்த அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வருகிறது“ என காவல்துறை இயக்குநர் ஜெனரல் சஞ்சய் பாண்டே எழுத்துப்பூர்வமாக அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் அதில், “பெண்கள் பொதுவாக கூடுதல் நேரம் பொறுப்புடன் இருக்க வேண்டிய நிலை ஏற்படும். இதனை கருத்தில் கொண்டு மாநில அரசு முடிவெடுத்துள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு பெண் காவலர்கள் மற்றும் அலுவலர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா ஆட்சி நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : பெண் காவலர்களுக்கு மடிக்கணினி, இருசக்கர வாகனங்கள் வழங்கல்

ABOUT THE AUTHOR

...view details