தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மகாராஷ்டிராவில் அதிகரிக்கும் கரோனா.. ஒரே நாளில் 711 பேருக்கு பாதிப்பு.. நாடு முழுவதும் 3 ஆயிரத்தை கடந்தது.. - அதிகரிக்கும் கரோனா பாதிப்பு

மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 711 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் அதிகரிக்கும் கரோனா.. ஒரு நாளில் 711 பேருக்கு பாதிப்பு
மகாராஷ்டிராவில் அதிகரிக்கும் கரோனா.. ஒரு நாளில் 711 பேருக்கு பாதிப்பு

By

Published : Apr 4, 2023, 9:13 PM IST

மும்பை:நாடு முழுவதும் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. பல்வேறு மாநிலங்களில் முகக் கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் கடைபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக, மகாராஷ்டிரா மாநிலத்தில் கரோனா பாதிப்பு சற்று அதிகமாக உள்ளது. இதனிடையே மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள கரோனா பாதிப்பு தரவுகளின் படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,038 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் சிகிச்சை பெற்றுவருபவர்களின் எண்ணிக்கை 21,179 ஆக அதிகரித்துள்ளது. முன்னதாக 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கரோனா பாதிப்பு 3 ஆயிரத்தை கடந்தது. அதன்பின் இன்று (ஏப்ரல் 4) 3 ஆயிரத்தை கடந்துள்ளது. அதேபோல கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி 9 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5,30,901ஆக உயர்ந்துள்ளது.

டெல்லி மற்றும் பஞ்சாபில் தலா 2 பேரும், ஜம்மு காஷ்மீர், மகாராஷ்டிரா மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர். அதே போல கேரளாவில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். கரோனா பரவலை பொறுத்தவரையில் மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 711 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 220.66 கோடி டோஸ் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்பது தெரியவருகிறது. இதற்கிடையில், மகாராஷ்டிர சுகாதார அமைச்சர் தானாஜி சாவந்த் கூறுகையில், மாநிலத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால், ஏப்ரல் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் மாநிலம் முழுவதும் சிகிச்சை ஒத்திகை நடத்தப்பட உள்ளது.

மக்கள் யாரும் பயப்பட வேண்டாம் எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் மற்றும் முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜே சிந்தியா ஆகியோருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:மீண்டும் அதிகரிக்கும் கரோனா.. முதலமைச்சருக்கு தொற்று உறுதி..

ABOUT THE AUTHOR

...view details